ஏறாவூர் இரட்டைப் படுகொலை – ஆறு பேரினதும் விளக்கமறியல் காலம் நீடிப்பு

11259 18

ஏறாவூர் இரட்டைப் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரிய ஆறு பேரினதும் விளக்கமறியல் காலம் எதிர்வரும் ஜுலை மாதம் 7 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர பிரதேசத்தில் வசித்துவந்த 56 வயதுடைய தாயும், அவரது 32 வயது மகளும் கடந்த வருடம் செப்டெம்பெர் மாதம் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேகத்துக்குரியவர்களும் கடந்த செப்டெம்பெர் மாதம் முதல் தொடர்ச்சியாக விளக்கமறியல் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment