கட்டாருக்கு நான்கு அரபு நாடுகள் 13 நிபந்தனைகள் விதிப்பு

308 0

கட்டார் அரசாங்கத்துக்கு, நான்கு அரபு நாடுகள் 13 நிபந்தனைகளை விதித்துள்ளன.

கட்டாருக்கு எதிராக குறித்த நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்க வேண்டுமாக இருந்தால், இந்த நிபந்தனைகளை அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சவுதிஅரேபியா, ஐக்கிய அரபு ராச்சியம் மற்றும் பஹ்ரெயின் ஆகிய நாடுகளுடன், எகிப்தும் இணைந்து இந்த நிபந்தனையை விதித்துள்ளது.

குறிப்பாக அல் ஜசீரா ஊடக ஒளிபரப்பை தடை செய்யுமாறும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈரானுடனான தொடர்பை குறைத்தல், துருக்கியின் இராணுவ முகாமை மூடுதல் போன்ற நிபந்தனைகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நிபந்தனைகளை அமுலாக்க 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a comment