மலையக மாணவர்களுக்கு இலவச கல்வி கருத்தரங்கு

327 0

எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறும் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோன்றும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இலவச கல்விக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.

அத்த வகையில் மலையக மாணவர்களின் நன்மை கருதி நாவலப்பிட்டி மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளில் இலவச கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாவலப்பிட்டி கதிரேசன் பெண்கள் பாடசாலையில் நாளை காலை 8 மணி முதல் 5 மணி வரையிலும், ஹட்டன் புளியாவத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் 25 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளிலும் கருத்தரங்குகள் இடம்பெறவுள்ளன.

கணிதம், விஞ்ஞானம், தமிழ், வரலாறு, வணிகக் கல்வி ஆகிய பாடங்களுக்கு விரிவுரைகள் இடம்பெறவுள்ளன.

அத்துடன், இம்முறை தரம் ஐந்தாம்தர புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட செயலமர்வொன்று நாளைய தினம் நாவலப்பிட்டி கதிரேசன் பெண்கள் பாடசாலையில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கருத்தரங்குகளில் பங்குபற்றுபவர்களுக்கு கடந்த கால வினாவிடை புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment