நீர் பிரச்சினைக்கு காரணம் என்ன? – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கம்

22983 0

நீரை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யாதமை காரணமாகவே நீர் பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பௌதீக ரீதியில் நாட்டுக்கு கிடைக்கும் நீரின் அளவு, இலங்கையைப் போன்று பத்து மடங்கு பாரிய நிலப்பகுதிக்கு போதுமானதாக காணப்பட்டதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டிளுள்ளார்.

நாட்டில் நீர்வளம் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டிய தனியொரு நிறுவனம் காணப்படாமை நீர் முகாமைத்துவத்தில் உள்ள பாரிய சிக்கலாகும்.

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தல், நீர் பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக அனைவரும் பொறுப்புடன் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

Leave a comment