மிலேச்சத்தனமான தாக்குதலை கண்டிக்கிறேன்! – மஹிந்த ராஜபக்‌ஷ

380 0

இலங்கை பல்கலைக்கழக போராட்ட வரலாற்றில் அரசாங்கம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

மருத்துவ கல்வியின் எதிர்காலத்தை குணப்படுத்துவதற்கு மாணவர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் மருத்துவர்களுடன் உடனடியாக கலந்துரையாடல் மேசையில் அமருமாறு ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசாங்க தரப்பினருக்கு தாம் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இது தொடர்பில் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பல்கலைக்கழக போராட்ட வரலாற்றில் மிலேச்சத்தனமாக தாக்குதல் நேற்று மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் இலங்கை வரலாற்றில் அழியாத வடுவாக திகழும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாக்கிஸ்தானுக்கான விஜயம் மேற்கொண்டுள்ள தாம் குறித்த தாக்குதல் காணொளிகளை மிகவும் வேதனையுடன் பார்த்ததாகவும், மனிதநேயமற்ற தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார். இலவச கல்வியை பாதுகாத்தல் மற்றும் அதற்காக மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதத்தை செலவிடுவதாக கூறி அதிகாரத்தை கைப்பற்றிய அரசாங்கத்திடம் கல்வியுரிமையை கோருவதற்கு போராட வேண்டியுள்ளது.

இந்த விடயம் உண்மையில் வருந்தத்தக்கதாக உள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

Leave a comment