டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை சோதனையிடுவதற்காக சென்ற பொது சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நபரரொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் நகர பகுதியில் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை சோதனையிட சுகாதார பரிசோதகர்கள் சென்றுள்ள நிலையில் அவர்களுக்கு நபரொருவர் இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.
பின்னர் , இது தொடர்பில் அவர்கள் காவற்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளதை தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சிலாபம் -வெல்லமஹாபாடுவ பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

