இரண்டு மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து கிழே விழ்ந்து நபர் ஒருவர் பலி

343 0

கடுவெல – வெலிவிட பிரதேசத்தில் நபர் ஒருவர் இரண்டு மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து கிழே விழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு குறித்த நபர் நண்பர்களுடன் மது அருந்தியுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாட்டினை தொடர்ந்து நபர் ஒருவர் அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் வீட்டில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே வீழ்ந்து படு காயமடைந்துள்ள நிலையில் நவகமுவ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

53 வயதுடைய குருவிட்ட பிரதேசத்தினை சேர்ந்த நபரே இதன் போது உயிரிழந்துள்ளார்.

Leave a comment