கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

359 0

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தின் அமான் வீதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் திருகோணமலை பிராந்திய விஷத்தன்மை போதைபொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 252 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கிண்ணியா , அமான் வீதியை சேர்ந்த அப்துல் லத்தீப் சவாஜிர் (வயது-40) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்

அவர் தமது வீட்டில் இருந்தவாறே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை தலைமை பொலிஸ் அலுவலகத்தில்  ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a comment