மீண்டும் பேரணிகளை நடத்துமாறு ஐ.தே.க கோரிக்கை

318 0

palitha-415x260மாத்தறையில் இருந்து கொழும்பிற்கும், அநுராதபுரத்தில் இருந்து கொழும்பிற்குமான மேலும் இரண்டு பேரணிகளை ஏற்பாடு செய்யுமாறு ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு, ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

ஐக்கிய கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார இதனை தெரிவித்தார்.

கடந்த தினத்தில் இடம்பெற்ற பேரணியில்  கலந்துகொண்டோரின் எண்ணிக்கை தொடர்பில் கூட்டு எதிர்கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இதனை மக்கள் பேரணி எனவும் மில்லியன் கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள் என தெரிவித்திருந்தனர்.

பேரணிகள் மூலம் அரசாங்கத்தை கவிழ்த்து விடலாம் என இவர்கள் கூறுகிறார்கள்.

எனினும், கொழும்பில் மாத்திரம் மில்லியன் கணக்கானவர்களை தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனவும், ஆரம்பம் முதல் இறுதிவரையிலான பேரணியிலேயே மில்லியன் கணக்கானவர்கள் கலந்து கொள்வதாகவே தாம் குறிப்பிட்டதாகவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதன்படி, பேரணியின் எண்ணிக்கை தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை அவர்கள் வெளியிட்டு வருவதாக ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டார்.