அமெரிக்கர்கள் விடுதலை – அமெரிக்கா ஈரானுக்கு நிதியுதவி

302 0

kerryஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா 40 கோடி அமெரிக்க டொலர்களை ஈரானுக்கு வழங்கியுள்ளது.
இந்த கொடுப்பனவு, குடியரசு தரப்பினர் தெரிவிப்பது போல், கப்ப பணமாக கருதக்கூடாது என பராக் ஒபாமாவின் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 ஈரானியர்கள் விடுவிக்கப்பட்டதன் பின்னர், ‘வாஷிங்டன் போஸ்ட்’ செய்தியாளர் உட்பட ஐந்து அமெரிக்கர்கள் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி விடுவிக்கப்பட்டனர்.
கைதி பரிமாற்ற நடவடிக்கைகளும், ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடை நீக்கமும் ஒரே நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை விபரித்துள்ளது.
எண்ணெய் விநியோகம் தொடர்பில் நீண்ட காலம் நிலுவையில் இருந்த பணத்தின் ஒரு பகுதியே இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.