மானஸ் மற்றும் நவுறுதீவு முகாம்களில் உள்ள இலங்கையர்களை அமெரிக்காவில் குடியமர்த்தும் திட்டம் இறுதி நிலையில்

309 0

அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் பப்புவா நியூகினியவின் மானஸ் மற்றும் நவுறுதீவு முகாம்களில் உள்ள இலங்கையர்களை அமெரிக்காவில் குடியமர்த்தும் திட்டம் இறுதி நிலையை அடைந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் இதனை தெரிவித்துள்ளார்.

அகதிகள் தொடர்பான இந்த திட்டம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் முன்வைக்கப்பட்டது.

இந்த திட்டம் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் முன்னர் கைவிடப்படவிருந்த போதும், பின்னர் அதனை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி தற்போது இந்த முகாம்களில் உள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட ஆயிரத்து 250 பேரை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கான இறுதிகட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிகாரிகள் விரைவில் வெளிப்படுத்துவர் என்றும் அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment