அரசாங்கம் தீர்மானம் எடுப்பதில் மிகவும் தாமதம்- மஹிந்த அமரவீர

13902 87

அரசாங்கம் சில இடங்களில் தீர்மானம் எடுப்பதில் மிகவும் தாமதமாக உள்ளதாகவும், அரசாங்கத்தின் குறைகளைக் கூறுவதற்கு தான் எந்தவிதத்திலும் பின்நிற்கப் போவதில்லையெனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று பயங்கரவாதிகள் போன்றுதான் சுகாதார அமைச்சில் செயற்பட்டனர். இவர்கள் ஆர்ப்பாட்டத்தினால் அரசாங்கத்தைக் கைப்பற்றலாம் என முயற்சிக்கின்றனர். இதனை இவ்வாறே நடவடிக்கை எடுக்காது விட்டால், நாளை ஒருநாள் பாராளுமன்றத்துக்குள்ளும் புகுந்து தனது கட்டுப்பாட்டில் அதனை வைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவதற்குரிய இடங்களை நாம் பெயரிட்டு ஒதுக்கவே வேண்டியுள்ளோம். இந்தக் கருத்துக்கு எவ்வளவு விமர்ஷனம் வந்தாலும் பரவாயில்லை. அதனை நான் முகம்கொடுக்கத் தயார் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Leave a comment