தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 8 மீனவர்கள் கைது

7081 57

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 8 மீனவர்கள் திருகோணமலை கடற்பகுதியில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது , சந்தேகநபர்களிடம் இருந்து டிங்கி படகொன்றும் மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளும் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக மீனவர்கள் மற்றும் குறித்த உபகரணங்கள் திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave a comment