போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையினை மீளக் கட்டியெழுப்ப சர்வதேசத்தின் உதவி அவசியம் – கிழக்கு முதலமைச்சர்

996 57

நாட்டில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் வாழ்க்கையினை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியுடன் துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

யுத்த பாதிப்புக்கு உள்ளான பகுதிகளை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் முனைப்புடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெடிபொருள் அபாயக்குறைப்பை அண்மித்த மாவட்டத்தை பிரகடனப்படுததும் முதல் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அந்த நிகழ்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் மற்றும் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்களும் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்வில் உரையாற்றும் போதே கிழக்கு முதலமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

Leave a comment