தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக எந்த கட்சியும் கூட்டு எதிர்ப்பை வெளியிடுவதில்லை!

486 11

சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் தேர்தலை சர்வஜன வாக்கெடுப்பு நடத்தமல் ஒத்திவைக்க முடியாது என கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் வரைப்படத்தை சுருட்டி வருவதுடன், கூட்டு எதிர்க்கட்சி தேர்தல் ஆணைக்குழுவை விமர்சித்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் 7 தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இணைந்து இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது குறித்து தேர்தல் ஆணைக்குழு மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மீது குற்றம் சுமத்தி பயனில்லை.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை குறித்து மாத்திரமல்ல, மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது பற்றிக் கூட இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புகளை வெளியிடுவதில்லை.

தொழிலாளர் தினத்தில் லட்சக்கணக்கான மக்களை அழைத்து வரும் எந்த கட்சியும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமைக்கு எதிராக 500 பேரையாவது கொழும்புக்கு அழைத்து வர முயற்சிப்பதில்லை எனவும் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment