கண்டி அஸ்கிரிய மஹா விகாரையின் சங்க சபையில் ஏகமனதாக எடுத்துள்ள சில தீர்மானங்கள் குறித்து அரசாங்கத்திற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும், கவனம் செலுத்த தவறினால் கடும் தீர்மானங்கள் எடுக்கப்படும் என அஸ்கிரிய மஹா விகாரையின் அனுநாயக்கர் வெட்ருவே ஸ்ரீ உபாலி தேரர் தெரிவித்துள்ளார்.
இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்கள் வெளியிடும் அரசியல்வாதிகள் சம்பந்தமாக அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை.
அவற்றுக்கு பதிலளிக்கும் பிக்குமாரை அடக்குவது அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு கடும் அதிருப்தியை வெளியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த முயற்சி காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் பதற்றமான நிலைமை உருவானால், அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்.
கலகொட அத்தே ஞானசார தேரர் ஆவேசமாக நடந்து கொள்வது, அவர் கருத்து வெளியிடும் விதத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆனால், அவரது நிலைப்பாடுகளை புறந்தள்ள முடியாது.
ஞானசார தேரர் முன்வைக்கும் விடயங்கள் தொடர்பில் உண்மைகளை தேடி அறிந்து தீர்வுகளை வழங்காது. சம்பவத்தை பயன்படுத்தி முழு பிக்கு சமூகத்தையும் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

