ஹப்புத்தளையில் மூன்று வெளிநாட்டவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் 13 பேர் ஹப்புத்தளை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈருருளி போட்டி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்தவர்கள் மீதே இந்த தாக்குதல் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இரண்டு பிரித்தானியர்களும் ஒரு நேபாள நாட்டவருமே இந்த தாக்குதலுக்கு உள்ளானவர்களாவர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் ஹப்புத்தளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்படி அவர்கள் அனைவரும் நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

