ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இணை அமைச்சரவை பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த கட்சியின் அமைச்சரவை பேச்சாளர் ஒருவர் பெயரிடப்படவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோர் தற்போது இணை அமைச்சரவை பேச்சாளர்களாக செயற்படுகின்றமை குறிப்பிடதக்கது.

