கங்கைகள் பெருக்கெடுத்ததன் காரணமாக முதலைகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறிவிப்பதற்காக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் சிறப்பு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வெள்ளப்பெருக்குடன் தென் மாகாணத்தில் சஞ்சரிக்கும் முதலைகள் தொடர்பில் 071 691 75 56, 071 821 55 81 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும்.
மேல்மாகாணத்தில் நிலவும் முதலை அச்சுறுத்தல் தொடர்பில் 071 821 36 11 ஆகிய இலக்கத்துடனும் கிழக்கு மாகாணத்தில் சஞ்சரிக்கும் முதலைகள் தொடர்பில் 071 82 53 268 ஆகிய இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்திற்காக 071 44 29 618 என்ற இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டள்ளது.
முதலை சஞ்சாரம் தொடர்பில் வனவிலங்கு திணைக்களத்தின் 011 2 888 585 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

