உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று

401 0

இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினமாகும்

வருடாந்தம் இலங்கையில் 25 ஆயிரம் பேர் புகைத்தல் மற்றும் அதுசார்ந்த சுகாதார பிரச்சினைகளால் உயிரிழக்கின்றனர்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாட்டு சாசனத்தை அமுலாக்கிய முதலாவது ஆசிய மற்றும் நான்காவது உலக நாடு இலங்கை ஆகும்.

சுகாதார அமைச்சின் தகவல்களின் பிரகாரம், இலங்கை அரசாங்கம் புகையிலை உற்பத்திப் பொருட்களின் வாயிலாக 100 பில்லியன் ரூபாய்கள் வருமானமாக பெறப்படுகிறது.

எனினும் 142 பில்லியன் ரூபாய்கள், புகைத்தல் மற்றும் அது சார்ந்த சுகாதாரப் பிரச்சினைகளுக்கான சிகிச்சைகளுக்காக அரசாங்கம் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அரசாங்கத்துக்கு வருடாந்தம் 42 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுகிறது.

இலங்கையில் 24 சதவீதமான ஆண்களும், 2.3 சதவீதமான பெண்களும் புகைத்தல் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

அதேநேரம் இலங்கையில் பாடசாலை மாணவுர்கள் 13 முதல் 18 வயதுகளில் புகைத்தலை பரீட்சித்து பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.