மூதூர் 3 சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம் – கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்

340 0

திருகோணமலை – மூதூர் – மல்லிகைத்தீவில் 3 சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 4 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சம்பவ இடத்தில் திரட்டப்பட்ட சான்றுகள அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தில் ஆய்வுக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மல்லிகைத்தீவு சந்தியில்பிரதேச மக்களாலும், மாணவர்களாலும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பின்றி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மனோகணேசன் காவற்துறையினருக்கு அறிவுறுத்தி இருப்பதாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.