இலங்கை விமானப் படைக்கு சொந்தமான ஹெலிக்கொப்டரில், கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அனர்த்த நிலை காரணமாக மீட்பு பணியில் ஈடுபட்டடிருந்த வேளையில், குறித்த பெண்ணை காப்பாற்றி கொண்டு செல்லும் வேளையில் குழந்தை பிறந்துள்ளது.
ஹெலிக்கொப்டரில் குழந்தை பிறந்தமை தொடர்பில் இலங்கை விமானப் படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கலவானை பகுதியிலிருந்து இரத்தினபுரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு உலங்கு வானூர்தியில் வைத்து குழந்தை பிரசவித்துள்ளார்

