தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த ஆண்டிற்கான கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்காவின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலையால் இந்த கால எல்லையை நீடிக்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய, இந்த பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் பணி எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடைய இருந்தது.
எனினும், இதனை எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி வரையில் நீடிக்க கல்வி அமைச்சர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன், இயற்கை அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பரீட்சை சான்றிதழ்களை இலவசமாக மீள் வழங்குவதற்கும் கல்வி அமைச்சர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

