3 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுக்களை அழிக்க நடவடிக்கை

291 0

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட்ட மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்கள், விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

300 சிகரெட் பக்கற்றுக்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக, சுங்கப் பிரதிப் பணிப்பாளர் பராகிரம பஸ்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை 02.00 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கட்டாரில் இருந்து வந்த இரு விமானங்களில் குறித்த சிகரெட்டுக்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பைச் சேர்ந்த 36 மற்றும் 38 வயதான இருவரே இந்த சம்பவத்தில் சந்தேகநபர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் பஸ்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.