8 மாவட்டங்களுக்கான அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது

287 0

நாட்டில் 8 மாவட்டங்களில் விடுக்கப்பட்டுள்ள அனர்த்த நிலைமை எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வுகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

நேற்று மாலை விடுக்கப்பட்ட இந்த அறிவித்தலின் அடிப்படையில் மலைப்பாங்கான பகுதியைச் சேர்ந்த மக்கள் அவதானமாக செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

இதனிடையே, இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இதுவரை பலியாகினவர்களின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.