நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் இரண்டாவது கப்பல் இலங்கை வருகை

428 0

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் இரண்டாவது கப்பல் இன்று பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

நிவாரணப்பொருட்களுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான “ஷர்துல்”  என்ற பெயருடைய கப்பலில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு வைத்தியக்குழுவொன்றும் வருகைதந்துள்ளது.

குறித்த கப்பலை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வரவேற்றதுடன் நிவாரணப் பொருட்களை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பொறுப்பேற்றார்.

இதேவேளை மூன்றாவது கப்பல் நாளை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.