இந்தியாவின் இரண்டாவது நிவாரண கப்பலும் இலங்கை வந்தடைந்தது

388 0

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியாவினால் வழங்கப்படும் நிவாரணங்களுடன் கூடிய இரண்டாவது கப்பல் இன்று மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பலில் உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட குழுவினரால் குறித்த கப்பல் ஏற்கப்பட்டுள்ளது.

இந்திய நிவாரணப் பொருட்களுடன் கூடிய முதலாவது கப்பல் நேற்று இலங்கையை வந்தடைந்த நிலையில், அதில் உலர் உணவு பொருட்கள், குடிநீர் போத்தல்கள், மருந்து பொருட்கள் ஆகியன உள்ளடங்கியிருந்தன.

இதனுடன் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுகாதார நிலைமைகளை பரிசோதனை செய்வதற்காக இந்திய மருத்துவ குழுவொன்றும் இலங்கை வந்துள்ளது