மழையுடன் கூடிய காலநிலை சற்று குறைவடைந்து நாளை முதல் மீண்டும் மழை

319 0

மழையுடன் கூடிய காலநிலை சற்று குறைவடைந்து நாளை முதல் மீண்டும் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக, வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இன்று மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாலை வேளைகளில் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

புத்தளம், கொழும்பு, காலி ஊடான ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் அடிக்கடி மழை பெய்யும் எனவும் வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.