உந்துருளியொன்று பேருந்தில் மோதி விபத்து ;ஒருவர் பலி

338 0

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையால் உந்துருளியொன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் மோதி இன்று இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்துள்ளவர் மெத்தபொல – கிரிஉல்ல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.

விபத்து இடம்பெறும் போது உந்துளியை செலுத்தியவர், தலைக்கவசத்தை அணியவில்லை என கிரிஉல்ல காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

அதிவேகத்தில் பயணித்த உந்துருளி பேருந்தின் முன்னாள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் ஊடாக தெரியவந்துள்ளது.

பேருந்தின் சாரதியும், பேருந்தும் கிரிஉல்ல காவற்துறையின் பொறுப்பில் கொண்டவரப்பட்டுள்ள நிலையில், சாரதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.