மட்டு மாவட்டத்தில் கடும் கடல் கொந்தளிப்பு – 25 ஆயிரம் மீனவ குடும்பங்கள் தொழில் இழப்பு

425 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் வீசிவரும் கடும் காற்று காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் எம்.ருக்ஷான் குரூஸ் இதனை தெரிவித்தார்

இதன் காரணமாக மாவட்டத்தில் மீன்பிடி; நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பூநொச்சி முனை, ஏத்துக்கால, புன்னக்குடா, நாவலடி, வாகரை உட்பட பல் கரையோரப் பிரதேசங்களில் காற்று வீசிவருகின்றது.

இதனால் மீனவர்கள் கடல் மற்றும் வாவியில் மீன்பிடியில் ஈடுபடுவதைத் தவிர்த்து வருகின்றனர்.

கடல் கொந்தளிப்பு மற்றும் காற்று காரணமாக மீனவர்களை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாமென கடற்றொழில் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தாhர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழிலில் 14000 குடும்பங்களும் வாவி மீன்பிடியில் 11000 குடுபங்களும் ஈடுபட்டுள்ளன.

இக்குடும்பங்கள் இதனால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.