அனர்த்தங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி சட்டத்தரணிகளின் ஆடம்பர விருந்து

316 0

இலங்கையில் இயற்கை அனர்த்தங்களினால் நூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் பலர், நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் களிப்பு விருந்து ஒன்றை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு இடம்பெற்றுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ஊழல் தடுப்பு நடவடிக்கையாளர் ஜேசி வெலியமுனவும் பங்கேற்றிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.