பொது இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்டவர் அடித்துக்கொலை

334 0

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே பொது இடத்தில் சிறுநீர் கழித்தவர்களை தட்டிக் கேட்ட ரிக்‌ஷா ஓட்டுநர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் நேற்று மாலை ஜி.டி.பி நகர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள பொது இடத்தில் இரு கல்லூரி மாணவர்கள் சிறுநீர் கழித்துள்ளனர். இதனை அப்பகுதியில் ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் பார்த்து கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் ரிக்‌ஷா ஓட்டுநரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்களுக்கிடையே கைக்கலப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் இணைந்து ரிக்‌ஷா ஓட்டுநரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனால், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட மானவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.