இலங்கைக்கு பாகிஸ்தான் அனுதாபம்

332 0

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தான் தமது அனுதாபத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான பாகிஸ்தானின் பதில் உயர்ஸ்தானிகர் பேராசிரியர் சப்ராஸ் அகமட் பாகிஸ்தான் சார்பாக தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள உயர்ஸ்தானிகர் சப்ராஸ் அகமட், பாகிஸ்தான் இலங்கையுடன் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து நிற்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் பாகிஸ்தான் எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.