ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் புதிய தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட சப்ஸார் அகமது பாட் காஷ்மீரில் இடம்பெற்ற தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தளபதி பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் கடந்த வருடம் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனை தொடர்ந்து, அந்த இயக்கத்தின் புதிய தளபதியாக சப்ஸார் அகமது பாட் பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த சிலர் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, காஷ்மீரின் பல பிரதேசங்களில் இடம்பெற்த தொடர் தாக்குதல்கள் காரணமாக இதுவரையில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

