இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் உள்நுழைவதை தடுக்க இந்தியா ‘டோனா’ எனப்படும் தொழினுட்ப படகுகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த தொழில்நுட்பத்துக்காக 16 ஆயிரத்து 210 மில்லியன் இந்திய ரூபாய்கள் செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தொழிநுட்பம் 2000 படகுகளுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவி வந்த மீனவர் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த டோனா தொழினுட்ப படகுகள் மூலம் இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் உட்புகும்போது எச்சரிக்கை வழங்கும் வகையில் அமைக்கப்படவுள்ளன.
2017- 2018ஆம் ஆண்டு முதல் கட்டமாக 500 டோனா தொழினுட்ப படகுகள் சேவைக்காக வழங்கப்படவுள்ளன.
இதற்கான செலவினை இந்திய மத்திய அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் பகிர்ந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

