கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உடைந்து விழுந்த மாடிக் கட்டடத்தின் உரிமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த கட்டட உரிமையாளர் கடந்த 21 ஆம் திகதி பொலிஸில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர் 25,000 ரூபாய் ரொக்கப் பிணையல் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி நளின் டி. இந்திரதிஸ்ஸ ஆஜராகியதுடன், குறித்த வழக்கு எதிர்வரும் 09 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 18ஆம் திகதி வெள்ளவத்தையில் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 21 பேர் வரை காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

