வெயங்கல்ல மண் சரிவு: 9 பேர் பலி, 05 பேரை காணவில்லை

621 0

வெயங்கல்ல, அகலவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவு காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 05 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள் என்று ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.