இரத்தினபுரி மாவட்டத்தில் 58 குடும்பங்களை சேர்ந்த 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

231 0

இரத்தினபுரி மாவட்டத்தில்; நேற் அதிகாலை முதல் தொடர்ந்து கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் இரத்தினபுரி. பெல்மதுளை, குருவிட்ட, எலபாத்த ஆகிய நான்கு பிரதேச செயலகப் பரிவுகளை சேர்ந்த 10 கிராசேவகப் பிரிவுகளில் 58 குடும்பங்களை சேர்ந்த 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.எம்.முதித்த மஞ்சுல தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்ப்பட்ட மக்களின் விபரம் குறித்து இன்று(25) ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளில் 34 குடும்பங்களை சேர்ந்த 128 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவில் கொலந்தகல கிராம சேவகர் பிரிவில் 22 குடும்பங்களை சேர்ந்த 80 பேரும், திரிவானக்கெட்டிய கிராம சேவர் பிரிவில் 12 குடும்பங்களை சேர்ந்த 48 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெல்மதுளை பிரதேச செயலகப் பிரிவில் ஐந்து கிராம சேவகர் பிரிவுகளில் 19 குடும்பங்களை சேர்ந்த 72 பேர் வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி பெல்மதுளை பிரதேச செயலகப் பிரிவில் வெளிமலுவ கிராம சேவகர் பிரிவில் 6 குடும்பங்களை சேர்ந்த 25 பேரும், கல்லின கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், தேவாலேகம கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களை சேர்ந்த 14 பேரும் வெள்ளத்தினாலும மற்றும்; வெளிமலுவ கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களை சேர்ந்த 12 பேரும், திப்பிட்டிகல பிரதேச செயலகப் பிரிவில் 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேரும் மண்சரிவினாலும் இவ்வாறு பாதிக்ப்பட்டுள்ளனர்.

குருவிட்ட பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் மரங்கள் முறிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்டள்ளனர்.

மேற்படி குருவிட்ட பிரதேச செயலகப் பிரிவில் உடகட கிராம சேவகப் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், தெற்கு கதன்கொட கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

எலபாத்த பிரதேச செயலகப் பிரிவில் ஒரு கிராம சேவகர் பிரிவில 3 குடும்பங்கள்; சேர்ந்த 10 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி எலபாத்த பிரதேச செயலகப் பிரிவில் அல்தொல கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவின் கொலந்தகல கிராம சேவகர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களை சேர்ந்த 80 பேரும் இரத்தினபுரி கொலந்தகல போதிராஜ விகாரையிலும் மற்றும் பெல்மதுளை பிரதேச செயலகப் பிரிவின் திப்பிட்டிகல கிராம சேவகர் பிரிவில் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேரும் திப்பிட்டிகல விகாரையில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மூலம் மாவட்ட செயலகத்தின் ஊடாக பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் எம்.எம்.முதித்த மஞ்சுல மேலும் தெரிவித்தார்.

மேற்படி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மக்களின் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்படைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இம்மாவட்டத்தில் மழை பெய்யுமானால் மண்சரிவு அபயம் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.