
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க,வெளிவிவகார அமைச்சராக தனது கடமைகளை இன்றைய தினம் பொறுப்பேற்றுள்ளார்.
தேசிய அரசாங்கத்தின் நிதி அமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயக்க, கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதேவேளை,புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட மங்கள சமரவீர இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

