தேசிய சந்தையில் அரிசியின் விலை வேகமாக அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை அவதானம் செலுத்தியுள்ளது.
எனவே அரிசியை இறக்குமதி செய்ய தனியார் பிரிவினருக்கு அனுமதியை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய இறக்குமதி செய்யப்பட வேண்டிய அரிசியின் அளவு, வாழ்க்கைச் செலவு போன்ற விடயங்கள் அமைச்சரவையின் உப குழுவினரால் தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படாத வகையிலும் நுகர்வோருக்கு வசதியான விலையில் அரிசியை கொள்வனவு செய்யக்கூடிய வகையிலும், அரிசியை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும்.

