சில அமைச்சுக்களின் முக்கிய அதிகாரிகள் விரைவில் மாற்றப்படலாம்!

317 0

எதிர்வரும் சில நாட்களில் ஜனாதிபதியின் தலையீட்டின் படி, அமைச்சுக்கள் சிலவற்றின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இதனைக் கூறியுள்ளார்.

அரசாங்கத்தை வலுவுடன் முன்நோக்கி கொண்டு செல்ல இதுபோன்ற மாற்றங்கள் குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரவை மாற்றத்தின் போது, சில பேதங்கள் இரு கட்சிகளுக்கு இடையிலும் இடம்பெற்று, அரசாங்கம் வீழும் என பலர் எதிர்பார்த்ததாக குறிப்பிட்ட லக்ஷ்மன் யாப்பா, எனினும் இந்த மாற்றங்கள் மிகவும் வெற்றிகரமாக ஜனாதிபதி மற்றும் பிரதமரால் முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.