அவுஸ்திரேலியாவில் ஆஸ்த்துமா நோயினால் உயிரிழந்த, ஈழ அகதி ஒருவருக்கு, முறையான சிகிச்சை வழங்கப்பட்டிருக்கவில்லை என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
35 வயதான அருள்செல்வம் வேல்முருகு என்ற அவர், 2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அகதியாக சென்றுள்ளார்.
இதன்போது கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருந்தக் காலப்பகுதியில், அவருக்கு ஆஸ்த்துமா நோய் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அங்கு சுகாதார பணிக்காக அரசாங்கத்தினால் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்த நிறுவனம், அவருக்கு போதுமான சிகிச்சைகளை வழங்கவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
அவர் உயிரிழந்த பின்னர், அவருக்கு மரணப் பரிசோதனை மேற்கொண்ட பிரேத பரிசோதகர், தமது அறிக்கையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், உரிய சிகிச்சையளிக்கப்படாததால்தான் அவர் உயிரிழந்தாரா என்பதை, குறித்த அதிகாரி உறுதிப்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

