நான்கு கோடி ரூபாய் பெறுமதியுடைய பெருந்தொகை ஹெரோயினுடன் பாகிஸ்தான் தம்பதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கராச்சியில் இருந்து இலங்கைக்கு வந்த போதே இவர்கள் கைதானதாக தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபர்கள் ஹெரோயினை பயணப் பையில் மறைத்து கடத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

