அரிசி இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு அனுமதி வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
சந்தையில் அரிசியின் விலை துரிதமாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, இதனால் தேசிய நெற்பயிர் செய்கை விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மற்றும் நுகர்வோருக்கு வசிதியான விலையில் அரிசியினை கொள்வனவு செய்வதற்கு ஏதுவான முறையில் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அவ்வாறு இறக்குமதி செய்யப்பட வேண்டிய அரிசியின் அளவானது, வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

