பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும் இன்று கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கவில்லை. சுகயீனம் காரணமாக ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இம்மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

