யாழ். குடா­நாட்­டில் வாழைப்­ப­ழத்­தின் விலை திடி­ரென வீழ்ச்­சி­

401 0
யாழ். குடா­நாட்­டில் வாழைப்­ப­ழத்­தின் விலை திடி­ரென வீழ்ச்­சி­ய­டைந் ததை அடுத்­துச் செய்­கை­யா­ளர்­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.
தற்­போது மாம்­ப­ழம், பலாப்­ப­ழம், பப்­பா­சிப்­ப­ழம் போன்­ற­வற்­றின் காலம் ஆரம்­பித்­துள்­ளது. இவை சந்­தை­க­ளுக்­குத் தாரா­ள­மாக வந்து சேர்­கின்­றன.
இத­னால் வாழைப்­ப­ழத்­தின் விற்­பனை வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருப்­ப­தாக செய்­கை­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.
கதலி வாழைப்­ப­ழத்­தின் விலை சடு­தி­யா­கக் குறைந்­துள்­ளது.
ஒரு கிலோ கத­லிப் பழம் 25 ரூபா­வாக விற்­கப்­ப­டு­கின்­றது.நீர்­வேலி வாழைக்­குலை விற்­ப­னைச் சந்­தைக்­குப் போதி­ய­ளவு வாழைக்­கு­லை­கள் வந்து சேர்­கின்­றன.  நீர்­வேலி. கோப்­பாய், நவக்­கிரி, சிறுப்­பிட்டி, உரும்­பி­ராய், ஊரெழு, இடைக்­காடு, புன்­னா­லைக்­கட்­டு­வன் போன்ற இடங்­க­ளில் இருந்தே அதி­க­ள­வான வாழைக்­கு­லை­கள் வரு­கின்­றன.
வாழைக்­குலை விற்­பனை வீழ்ச்­சி­யைப் பயன்­ப­டுத்­தித் தென்­ப­கு­திக்கு அதி­க­ள­வான வாழைக்­கு­லை­கள் வாக­னம் மூலம் எடுத்­துச் செல்­லப்­ப­டு­கின்­றன எனத்தெரி­விக்­கப்­பட்­டது.