பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் மொரட்டுமுல்ல – கொஸ்பெலேன பாலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இவர்கள் கல்கிஸ்ஸை, மொரட்டுமுல்ல, பிலியந்தலை மற்றும் கஹதுடுவ பிரதேசங்களில் இடம்பெற்ற பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது.
ரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த இந்த சந்தேக நபர்கள் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

