சிங்களவரின் பொறுமையை சோதிக்காதே – பதுளையில் சுவரொட்டி

361 0

பதுளை மாநகருக்கு அருகாமையில் சிறுபான்மையினரை அச்சப்படுத்தும் வகையிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சிங்களயாகே இவசீம பரீக்ஸா நொகரனு’ என்ற வாக்கியங்கள் கணணி மூலம்சிங்கள மொழியிலான அச்சுப்பிரதிகளே சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தன.

பதுளை முத்தியங்கனை ரஜ மஹா விகாரையின் பின்னால் செல்லும் பிரதான பாதை மதிலிலேயே, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இச்செயற்பாடுக்ள அனைத்து சிறுபான்மை மக்களையும் அச்சமடைய வைத்துள்ளன.

சிங்களவர்களின் பொறுமையை சோதிக்காதே’ என்பது, மேற்படி சிங்கள மொழியிலான சுவரொட்டிகளின் தமிழாக்கமாகும்