கொழும்பு காலிமுகத்திடலில் நிர்மாணிக்கப்படும் நிர்மாண பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் நீண்ட காலமாக இராணுவ தலைமையகம் இயங்கி வந்த நிலையில் அகழ்வின் போது 8 அடியிலான மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன.
முதலில் இப்பிரதேசத்தில் கல்லறைகள் காணப்பட்டது என்று வாக்குமூலம் வழங்கப்பட்டிருந்தாலும் எலும்பு கூடுகளின் அமைவுநிலை சீராக இல்லை. சித்திரவதையின் பின்னர் கொல்லப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

