ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான கண்காணிப்பு குழு, இலங்கை தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளது.
இந்த குழுவின் கூட்டம் இந்த மாதம் 29ஆம் திகதி முதல் ஜுன் மாதம் 23ஆம் திகதி வரையில் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது.
இதன்போது ஜுன் மாதம் 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் இலங்கை தொடர்பான ஆய்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் நிலைமைகள் குறித்து இதன்போது ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
இது தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தேசிய மனித உரிமைகள் நிறுவகங்களின் அறிக்கைகளும் ஏற்கப்பட்டு விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் அறிக்கை எதிர்வரும் ஜுன் மாதம் 27ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

